திமுக அரசின் மீது தமிழக மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், ஆட்சியை அகற்றக் காத்திருப்பதாகவும்  அன்புமணி ராமதாஸ் இன்று (நவ.28) சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நான் தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டபோது, மக்கள் மத்தியில் திமுக அரசின் மீதான கோபத்தை நேரில் உணர்ந்தேன். மக்கள் அதிர்ச்சியில் இல்லை, மாறாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே, வரவிருக்கும் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட எந்தக் கூட்டணியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் இடம்பெறும்” என்று திட்டவட்டமாக அறிவித்தார். பாமகவின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.