மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் (Nashik) உள்ள சஹ்தேவ் நகர் பகுதியில், மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் தான் வசித்து வந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராஜ் அமோல் ஷிண்டே என்ற அந்தச் சிறுவன் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) வீடியோவில், சிறுவன் தனது நண்பர்களைக் கூப்பிடுவதற்காக பால்கனியின் சுவரில் ஏறி நின்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் சிறுவனுக்குத் தலையில் பலத்த காயம் (Severe Head Injury) ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவனை உடனடியாக மீட்டு, நாசிக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.