கரூர் சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று (நவ. 23) காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுகவினரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “திமுகவினருக்கு   தவெகவினர் மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம். ஆனால், நமக்கு திமுக மீது வன்மம் கிடையாது” என்று கூறி, அதேசமயம் திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

ஆளும் கட்சியான திமுக மீது நேரடி அரசியல் தாக்குதலைத் தொடுத்த விஜய், “உங்களையும், நம்மையும் பொய் சொல்லி ஏமாற்றித்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மக்களை ஏமாற்றி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “நீட்டை ஒழிப்பேன் என கதை எல்லாம் விட்டவர்கள், இப்போது எங்கு பார்த்தாலும் கொள்கை இல்லை” என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் விமர்சித்தார். விஜயின் இந்தக் கருத்துகள், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராகத் தவெகவின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.