அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் சென்னை, வானகரம் ஸ்ரீவாரு  வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்தக் கூட்டங்கள் கூடுகின்றன.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் இந்தக் கூட்டத்தை இபிஎஸ் கூட்டியுள்ளார்.