தமிழக  வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா மீது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும், அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததாக வெளிப்படையாகக் கூறியது பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்தது. கட்சியின் செயல்பாட்டுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பல தவெகவினர் கருதுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், ஆதவ் அர்ஜுனாவின் மச்சான் கூறிய , “திமுகவின் பின்னணியுடன்தான் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார்” என்று பகிரங்கமாக சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டியது தவெகவின் உட்கட்சி வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தொடர்ச்சியான சர்ச்சைகள் காரணமாக, கட்சியின் நற்பெயரைக் காக்க ஆதவ் அர்ஜுனாவை நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கட்சித் தலைமை இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.