தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) டி.டி.வி. தினகரன் விலகியதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட அமமுக நிர்வாகி மணிகண்டன், தனது 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வின் தாய்க் கழகத்தில் இணைந்து கொண்ட அவர், இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
NDA கூட்டணியிலிருந்து அமமுக விலகிய பிறகு, சென்னை, தஞ்சை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் அமமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்த நிலையில், திருவாரூர் நிர்வாகியின் இந்த இணைவு அமமுகவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுவதுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான கள நிலவரத்தில் அதிமுக தனது பலத்தை மேலும் அதிகரிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
