மதிமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக நீக்கப்பட்டு, இன்று (நவ. 20) ‘திராவிட வெற்றிக் கழகம்’ (திவெக) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
எனினும், அவரது புதிய கட்சியின் ஆதரவு, ஆரம்பத்திலிருந்தே ஆளும் திமுக கூட்டணிக்கு இருக்கும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புதிய கட்சி தொடங்கினாலும், மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என்ற நோக்கத்தில் தனது ஆதரவு திமுக கூட்டணிக்கு இருக்கும் என்றும், வாய்ப்புக் கிடைத்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் மல்லை சத்யா தெரிவித்திருந்தார்.

வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு கட்சியை விட்டு நீக்கப்பட்ட மல்லை சத்யா, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
