பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியைச் சுட்டிக்காட்டி, “காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவை இல்லை, ஊருக்கும் தேவை இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (நவம்பர் 15) கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜேந்திர பாலாஜி தனது கருத்துக்கு உடனடியாகப் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் மன்னிப்புக் கேட்கத் தவறினால், காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்தார்.
