சமூக வலைத்தளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. குளிர்காலம் தொடங்கியவுடனே, குளிப்பதென்றாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கும் நிலையில், அந்த வீடியோவில் உள்ள இளைஞர் ஒருவர் குளிருக்குத் தப்பித்து, அதேசமயம் குளித்த திருப்தியைக் கொடுக்கக் கூடிய ஒரு யோசனை முறையைக் கையாண்டுள்ளார்.
அவர் தனது உடல் முழுவதும் வெளிப்படையான பிளாஸ்டிக் கோட் (Transperant Plastic Coat) ஒன்றால் மூடிக்கொண்டு, அதன் மீது வாளியால் தண்ணீரை ஊற்றுகிறார். மேலும், உண்மையிலேயே குளிப்பதுபோல சோப்பும் தேய்த்துக் கொள்கிறார்.
View this post on Instagram
பிளாஸ்டிக் கோட் அணிந்து அவர் தண்ணீர் ஊற்றிக்கொள்வதால், தண்ணீர் அவரது உடலை நேரடியாகத் தொடவில்லை. இதனால் அவருக்குக் குளிர் தெரியவில்லை என்பதுபோல் அவர் செயல்படுகிறார்.
இந்த வினோதமான குளியல் முறையைப் பார்த்த நெட்டிசன்கள், சிரிப்பை அடக்க முடியாமல் கமெண்ட் செய்து வருகின்றனர். பலர், “இவன் ஒரு ஜீனியஸ்!” என்றும், சிலர், “நாங்களும் நாளை முதல் இப்படியே குளிப்போம், கேஸ் சிலிண்டர் செலவும் மிச்சமாகும்” என்றும்
வேடிக்கையாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்துப் பலர் குளிர்காலத்தில் குளிக்கச் சோம்பேறித்தனப் படும் தங்கள் காலைப் பொழுதுகளை நினைத்து ரசித்து வருகின்றனர்.
