தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் மர்மப் பொருள் வெடித்ததில், அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியில் உறைந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தச் சம்பவம் நடந்த பகுதியை போலீஸார் உடனடியாகச் சுற்றி வளைத்து, பதற்றமான சூழல் நிலவுவதால், டெல்லியில் உச்சக்கட்டப் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
