அசர்பைஜான் நாட்டில், யனார்தாக் (‘எரியும் மலை’ என்று பொருள்) என்றழைக்கப்படும் மலை ஒன்று கடந்த 4,000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. புயல், மழை, பனி அல்லது குறைக்காற்று என எந்தவொரு இயற்கைச் சக்தியாலும் அணைக்க முடியாத இந்தத் தீப்பிழம்பு, உலகின் பெரும் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிலத்தடியில் இருந்து கசிந்து வரும் இயற்கை எரிவாயுவின் காரணமாகவே இந்த அற்புத நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாமல் தீப்பிழம்புகளை வெளிப்படுத்தும் இந்த மலை, பார்க்க வருபவர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

ஒரு காலத்தில், அசர்பைஜான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற இயற்கை எரிவாயுவால் எரியும் பல மலைகள் இருந்தன. இருப்பினும், காலப்போக்கில் அந்தப் பகுதிகளில் எரிவாயு எடுக்கும் பணிகள் தீவிரமடைந்ததால், பெரும்பாலான மலைகளில் தீ அணைந்துவிட்டன. அதிர்ஷ்டவசமாக, தற்போது இந்த யனார்தாக் மலை மட்டுமே அந்த வரலாற்றுத் தொன்மையையும், அணையாத தீயின் மர்மத்தையும் தக்கவைத்துக் கொண்டு, உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.