அதிமுகவில் இருந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளரான திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை, கட்சியின் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, சத்யபாமாவை மாவட்ட மகளிர் அணிப் பொறுப்பிலிருந்தும் இ.பி.எஸ். நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்யபாமா நீக்கப்படுவதற்குக் காரணமாக, அவர் கடந்த 30-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றது பார்க்கப்படுகிறது. இது இ.பி.எஸ்.ஸின் கவனத்திற்குச் சென்ற நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கருதி, முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 12 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.