சென்னை, நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல் குறித்துத் தகவல் கிடைத்ததும், உடனடியாகத் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தீவிரச் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரச் சோதனைக்குப் பிறகு, இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி  என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்களின் வீடுகளுக்கும் ஒரு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.