பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், சனிக்கிழமை (நவம்பர் 1) லாகூரில் நடந்த இறுதி டி20 போட்டியின் போது, தனது வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு நடவடிக்கைக்காக சமூக ஊடகங்களில் மீண்டும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இவரைப் பல ரசிகர்கள் “சக்கர்” என்று அழைத்துள்ளனர்.

இதற்கு முன்னர், மார்ச் 2024 இல், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) விளையாடும்போது தாரிக் மீது சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு நடவடிக்கை தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. எனினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு, லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) நடைபெற்ற அதிகாரப்பூர்வ மதிப்பீட்டிற்குப் பின் நிபுணர்களால் அவர் விடுவிக்கப்பட்டார்.

“>

 

இதுகுறித்து விளக்கம் அளித்த தாரிக், “என் கையில் இரண்டு முழங்கைகள் உள்ளன. என் கை இயற்கையாகவே வளைந்து காணப்படுகிறது; இது ஒரு உயிரியல் பிரச்சினை” என்று கூறி, தனது பந்துவீச்சு நடவடிக்கை குறித்துப் பிறர் தவறாக உணர்வதாகத் தெரிவித்தார்.

“>

 

பல ஆய்வுகளுக்குப் பின்னரும், சர்வதேச கிரிக்கெட்டில் தாரிக்கின் பயணம் ஊக்கமளிப்பதாகவே இருந்து வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மர்ம சுழற்பந்து வீச்சாளரான தாரிக், பலமுறை தேர்வு செய்யப்படாததால் மனமுடைந்து தனது கிரிக்கெட் கனவுகளைக் கைவிட்டு துபாய்க்குச் சென்று விற்பனையாளராகப் பணியாற்றினார்.

“>

 

அப்போது, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஆரம்பக்காலப் போராட்டங்களைச் சித்தரிக்கும் ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் அவரது வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது.

தோனியின் உறுதியால் ஈர்க்கப்பட்ட தாரிக், தனது வேலையை விட்டுவிட்டு, புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் மீண்டும் தனது கிரிக்கெட் கனவைத் தொடரப் பாகிஸ்தானுக்குத் திரும்பினார். அவரது இந்த அசாதாரணப் பந்துவீச்சு சர்ச்சைக்கிடமிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டிற்கான அவரது பயணம் தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.