மும்பை ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் (Ticket Examiner) பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே, ரூபீனா அகிப் என்ற பெண், ஓர் அசாதாரணச் சாதனையைப் படைத்து அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறார். தனது முதல் நாள் பணியின்போதே, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 150 நபர்களை அவர் பிடித்துள்ளார். இதன் மூலம், ஒரே நாளில் ரயில்வே துறைக்கு ₹45,000 அபராதம் வசூல் செய்து கொடுத்துள்ளார்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களில், சிலர் தங்களை ‘நான் யார் தெரியுமா?’ என்று மிரட்டும் தொனியில் அதிகாரத்துடன் பேசிய போக்கிரித்தனமான நபர்களும் அடங்குவர். எனினும், ரூபீனா அகிப் சிறிதும் அஞ்சாமல், அவர்களை உறுதியான முறையில் எச்சரித்து, விதிமுறைகளின்படி உரிய அபராதத்தைக் கட்ட வைத்துள்ளார். அவரது துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான செயல்பாடு ஆகியவற்றைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
