நெல் கொள்முதல் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலம் முன்கூட்டியே எச்சரித்திருந்தார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள். ஆனால், “எடப்பாடியார் சொல்வது எதையும் எதிர்க்க வேண்டும்” என்பதையே ஒரே நோக்கமாகக் கொண்ட திமுக அரசு, மக்களின் உண்மையான பிரச்சனையை உணரவில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது நெல் கொள்முதல் தாமதம் காரணமாக ஏராளமான விவசாயிகள் அவதியில் சிக்கி, தங்கள் உழைப்பின் பலனை பெற முடியாமல் தவிக்கின்றனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது திமுக அரசு தான் என அதிமுகவின் ஐ.டி. விங் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
“விவசாயிகளின் குரலை கேட்காத விடியா திமுக அரசால், விவசாயிகள் சிந்தும் கண்ணீருக்கு என்ன பதில் சொல்ல முடியும்?” என அதிமுக பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், “விவசாயிகளுக்கு எந்த நேரத்திலும் கஷ்டம் ஏற்பட்டால், அவர்களுடன் துணை நிற்கும் ஒரே தலைவர் — விவசாய காப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி!” என்ற வாசகத்துடன் அந்த பதிவு முடிவடைந்துள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிமுக ஆதரவாளர்களால் பரவலாகப் பகிரப்பட்டு,வருகிறது.
அன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வாயிலாக, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக இந்த விடியா திமுக அரசு நெல் கொள்முதல் செய்யாததை எச்சரித்தார்.
ஆனால், எடப்பாடியார் என்ன சொன்னாலும் மறுக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்த ஸ்டாலின் அரசு, மக்களின்… pic.twitter.com/Fp1NAHxol4
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) October 22, 2025
“>
