சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 வரையில் குறைந்த நிலையில் தற்போது விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 1280 ரூபாய் வரையில் குறைந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 92320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 12589 ரூபாய்க்கும், ஒரு சவரன் 100712 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 7 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 175 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 175000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
