21 வயது இளைஞர் ஒருவர், தன்னை கேன்சர் நோய் வென்றுவிட்டதாகவும், இந்த ஆண்டு தனது கடைசி தீபாவளியாக இருக்கும் எனவும் உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இணையவாசிகளை உலுக்கியுள்ளார். 2023-ஆம் ஆண்டு இவருக்கு பெருங்குடல் கேன்சர் (ஸ்டேஜ்-4) இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மருத்துவர்கள் இவருக்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆயுள் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துவிட்டனர்.
இந்த மனவேதனையில், Reddit தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அவர் பகிர்ந்தார். “இதுவே என் கடைசி தீபாவளி; இந்த தீபங்களின் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மீண்டும் பார்க்க முடியாது” என பதிவிட்டு, தனது வலியை வெளிப்படுத்தியுள்ளார்.
Cancer won guys , see ya !!!
byu/Erectile7dysfunction inTwentiesIndia
“தீபாவளி வருகிறது. தெருக்களில் விளக்குகள் ஏற்கனவே ஒளிர்கின்றன. ஆனால், இந்த வெளிச்சத்தை நான் கடைசியாக பார்க்கிறேன். இந்த மகிழ்ச்சி, ஒலிகளை மிகவும் இழப்பேன். வாழ்க்கை இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும்போது, புதியதொரு உணர்வு தோன்றுகிறது. அடுத்த ஆண்டு யாராவது எனக்காக தீபம் ஏற்றுவார்கள்;
நான் ஒரு நினைவாக மட்டுமே இருப்பேன்,” என அவர் எழுதியுள்ளார். மருத்துவ சிகிச்சைகள் நிறுத்தப்பட்ட நிலையில், “எனது நேரம் முடிந்துவிட்டது. என் ஆசைகளும் எண்ணங்களும் மாறிவருகின்றன. வீட்டில் உள்ளவர்களின் கண்களில் வலி தெரிகிறது. இதை ஏன் பதிவிடுகிறேன் என்று தெரியவில்லை,
ஆனால் என் மறைவுக்கு முன் இதையாவது சொல்ல விரும்புகிறேன்,” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ஆயிரக்கணக்கானோரை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. பலர், “அதிசயம் நடக்க வேண்டும், கடவுள் உங்களுக்கு புதிய வாழ்க்கை தருவார்” என ஆறுதல் கருத்துகளை பகிர்ந்து, பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
