நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டி வரும் நிலையில் பண்டிகை நாட்களை முன்னிட்டு தற்போது பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில் தற்போது விமான போக்குவரத்து டிக்கெட் விலை அதிக அளவில் அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னை – மதுரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129 வசூலிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் ரூ.17,683 வரை அதிகரித்துள்ளது. இதேப் போன்று
சென்னை – திருச்சி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608, இன்றைய கட்டணம் ரூ.15,233 வரை
சென்னை-கோவை சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351, இன்றைய கட்டணம் ரூ.17,158 வரை
சென்னை – தூத்துக்குடி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608, இன்றைய நாள் கட்டணம் ரூ.17,053 வரை
சென்னை – டெல்லி சாதாரண நாள் கட்டணம் ரூ.5,933,இன்றைய கட்டணம் ரூ.30,414 வரை
சென்னை – மும்பை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,356, இன்றைய கட்டணம் ரூ.21,960. வரை
சென்னை-கொல்கத்தா சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293, இன்றைய கட்டணம் ரூ.22,169. வரை
சென்னை-ஹைதராபாத் சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926, இன்றைய கட்டணம் ரூ.15,309 வரை.
சென்னை- கவுகாத்தி, சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499 இன்றைய கட்டணம் ரூ.21,639 வரை ஆகும். மேலும் விமான டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
