கரூர் மாவட்டத்தில் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டுமெனக் கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று (அக்.13) விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவில், கரூர் நெரிசல் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் துல்லியமான விசாரணை நடைபெற சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை பணிகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த உத்தரவால் வழக்கின் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து மேலும் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
