தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் சென்றதாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில்   நேற்று (அக்.08) நள்ளிரவு, தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறி, 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், நெடுந்தீவு அருகே இன்று  மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களும் இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் பிடிபட்டுள்ளனர்.

இதனால், 2 நாட்களில்  நாளில் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 47 தமிழ்மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுடன் வந்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென, மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.