இன்றைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் அமைப்பது மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. வீட்டில் தேவையான காய்கறிகளை தாமே வளர்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் மாடித்தோட்டம் பற்றிய காணொளிகள் பரவலாக பகிரப்படுகின்றன. அப்படி ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இதில் ஒரு நபர் வெண்டைக்காய் செடியை எளிமையாக வளர்க்கும் முறையை விளக்குகிறார். இந்தக் காணொளி மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் உள்ளதால் பலரையும் ஈர்த்துள்ளது.
அந்தக் காணொளியில், அந்த நபர் முதலில் வெண்டைக்காய் விதைகளை க்ரோ பேக்கில் போட்டு முளைக்க வைக்கிறார். முளைத்த பிறகு, ஒரு பேக்கிற்கு இரண்டு செடிகளை நட்டு வளர்க்கிறார். 45 நாட்களில் செடிகள் வளர்ந்து காய் காய்த்து அறுவடைக்கு தயாராகிவிடும் என்று வீடியோவில் அந்த நபர் கூறுகிறார். மேலும், செடிகளுக்கு தனியாக உரம் வாங்காமல், காய்ந்த இலைகள் மற்றும் சருகுகளை உரமாகப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார். இந்த எளிய மற்றும் இயற்கை முறை பலருக்கு உத்வேகம் அளித்து, மாடித்தோட்டம் அமைக்கத் தூண்டுவதால் இந்தக் காணொளி வைரலாகி வருகிறது.
