சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள லியுவாங் நகரின் ஸ்கை தியேட்டரில், ‘அக்டோபர்: பூக்கள் மலரும் சத்தம்’ என்ற தலைப்பில் நடந்த ட்ரோன் மற்றும் பட்டாசு ஷோ திடீர் தொழில்நுட்பக் கோளாறால் குழப்பமான சூழலாக மாறியது.
நிலம் மற்றும் நீர்மேற்பரப்பில் 3D விஷுவல் ஸ்பெக்டாக்கிளை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 2 அன்று நடந்தபோது, ட்ரோன்கள் திடீரென தோல்வியுற்று தீப்பொறிகளாக பார்வையாளர்கள் மீது விழத் தொடங்கின.
Drone fireworks show fails in China 😳
Sparks falls on spectators, no injuries reportedpic.twitter.com/Mx4wDwAvsd
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) October 4, 2025
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில், பயந்து ஓடும் மக்கள், இருக்கைகளை தலையில் வைத்து பாதுகாக்க முயல்கின்றனர். உலர் காலநிலை இதற்குக் காரணம் என்று லியுவாங் கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Drone show mishap: technical issues cause drones to crash mid-performance. pic.twitter.com/bomPXI54QW
— Moments that Matter (@_fluxfeeds) October 3, 2025
அதிர்ச்சியூட்டும் வீடியோக்களைப் பார்த்த நெட்டிசன்கள், “வானத்தில் இருந்து லாவா போல் விழுந்தது” என்றும், “ராஜா போன்ற கிரைசிஸ் மேனேஜ்மென்ட்” என்று ஒரு பார்வையாளர் இருக்கையை தலையில் வைத்து பாதுகாக்கும் காட்சியை பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்.
🤯 In China, hundreds of drones fell and exploded right into the crowd — they were launched as part of a light show in the city of Liuyang, but something went wrong and the UAVs got out of control. A fire broke out there. pic.twitter.com/grRzlg3W1S
— Гакрукс (@Gakruks1) October 4, 2025
சீன அரசு காயங்கள் இல்லை என்று தெரிவித்தாலும், சிலர் “உண்மையில் காயங்கள் இருந்தாலும் வெளியிட மாட்டார்கள்” என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், ட்ரோன் ஷோக்களின் ஆபத்துகளை எச்சரிக்கையாக அமைத்துள்ளது, ஏனெனில் லியுவாங் பட்டாசு காட்சிகளுக்குப் பிரபலமான இடம்.
