கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிவாரண தொகையை நேரில் சென்று வழங்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது அந்த முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய திட்டமிடலின்படி, நிவாரண தொகை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு விதித்த நிர்வாக ஒழுங்குமுறைகள் தவிர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேசமயம், விஜய் விரைவில் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தரப்புகள் தெரிவித்துள்ளன.
