கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த நிதானத்துடன் செயல்படுவது மிகவும் சரியானது. இது அவரது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தவெக தலைவர் விஜய்யை உடனடியாக கைது செய்வது தவறு. அதுபோன்ற முடிவுகள், எதிர்காலத்தில் மற்ற கட்சி தலைவர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடிய நிலையை உருவாக்கும். எனவே, மாநில அரசு சட்டப்படி நியாயமாக செயல்பட வேண்டும். குற்றம் உள்ளவர்களை எச்சரிக்கையாக விசாரிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
