தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீதாமோதர் ரெட்டி (73) இன்று (அக்டோபர் 2) அதிகாலை காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதாமோதர் ரெட்டி, அங்கு இருந்து 5 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலனில் சிறப்பாக பணியாற்றியவர். ஒய்எஸ்ஆர் ஆட்சிக் காலத்தில் ஐடி துறை அமைச்சராக இருந்த அவர், தனது அரசியல் அனுபவத்தால் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்களிப்பு செய்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.