2025 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியின் கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது திலக் வர்மா, பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் வீசிய பந்தை பவுண்டரிக்கு அப்பால் மிகப்பெரிய சிக்ஸராக அடித்தார். இந்த சிக்ஸர் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. பின்னர் ரின்கு சிங் உதவியுடன் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த சிக்ஸரை பார்த்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், உற்சாகத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் மேஜையை பலமாக தட்டி, மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.