பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியர்களிடம் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகள் சமீப காலமாக வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் ஐந்து மாணவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையை தொடர்ந்து இடைநிலை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.