கரூர் மகளிர் காங்கிரஸ் தலைவர் கவிதா நேற்று திமுகவில் இணைந்தது, அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் கடுமையான பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது: “கூட்டணி தர்மம் என்பது இருபுறமும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் திமுகவின் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஒருவரே, காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரில் இத்தகைய அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனக் கூறியுள்ளார். ஜோதிமணியின் இந்த கருத்து, திமுக–காங்கிரஸ் கூட்டணியில் பதற்றம் நிலவுவதாக சுட்டிக்காட்டுகிறது.
சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும்… pic.twitter.com/ASzOBRHpVi
— Jothimani (@jothims) September 24, 2025
“>
