உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரத்தில் கார்கில் சதுக்கம் அருகே செப்டம்பர் 20ஆம் தேதி மாலை, 22 வயது பெண்ணை துப்பாக்கி காட்டி கடத்த முயன்ற நபரை, அந்த பெண் தைரியமாக எதிர்த்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த பெண் தனது நண்பர்களுடன் வெளியே இருந்தபோது, மதுராவை சேர்ந்த நபர் ஷ்யாம்வீர் சிங் தனது காரில் வந்து, ரூ.5,000 கொடுக்க தயார் என கூறி, காருக்குள் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.

பெண் அந்த நபரின் வார்த்தைகளைப் புறக்கணித்ததையடுத்து, அவர் காரில் இருந்து இறங்கி, அவரைக் கட்டிப் பிடித்து காருக்குள் இழுத்துச் செல்ல முயன்றுள்ளார். இந்தநிலையில், பெண் அவரை தள்ளி விட்டு, காரின் சாவியை பறித்து துப்பாக்கி மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தைரியமாக சண்டையிட்டார். அவரது அழுகுரல் கேட்ட வந்த பொதுமக்களை கண்டு, பயந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆக்ரா போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மதுரா பால்தேவ் பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் ஆசாமி ஷ்யாம்வீர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சிகந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.