அமெரிக்க நாட்டின் கலி போர்னியாவில் தன் அறை நண்பருடன் நடந்த தகராறில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் என்ற வாலிபர் காவல்துறையினரால் சுட்டு கொலைப்பட்டார். இதையடுத்து தன் மகனின் உடலை வீட்டுக்கு கொண்டு வர மத்திய அரசானது உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சாண்டா கிளாரா காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. மேலும் சந்தேக நபராக கருதப்பட்ட நிஜாமுதீன் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக அழைப்பாளர் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிஜாமுதீன் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிஜாமுதீன் குடும்பத்தினர் அவர் இனவெறியால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.