அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா இல்லாததால், குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கட்சிக்கு குறைவாகிவிட்டதாக விமர்சகர்கள் கூறி வந்தனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களில் அந்த சமூகத்தின் ஆதரவு இல்லையெனில் வெற்றி பெற முடியாது என்ற கருத்தும் நிலவியது. இதனால், எதிர்க்கட்சியினரால் அடிக்கடி அதிமுக குறைசொல்லப்பட்டு வந்தது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவரான தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார்.
இதன் மூலம் அந்த சமூகத்தின் வாக்குகளை மீண்டும் அதிமுகவுக்கு திருப்பி எடுக்க முடியும் என ஈபிஎஸ் நம்புகிறார் என்றும், இது வரவிருக்கும் தேர்தலுக்கான முக்கியமான அரசியல் திட்டமாக கருதப்படுகிறது.
