அரசியலில் விஜய் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்தவர் என சீமான் விமர்சித்த நிலையில், அந்தக் கருத்துக்கு டி.ராஜேந்திரனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்படுகிறது. விஜய் புலியா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், “அதை நான் சொல்ல முடியாது” என அவர் தெரிவித்தார்.
ஆனால், “சில அரசியல் கட்சிகளின் வயிற்றில் விஜய் புளியை கரைத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை” என டி.ஆர். கூறியிருப்பது விஜய் ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீமான் விமர்சனத்துக்குப் பிறகு வெளியான இந்தக் கருத்து, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
What an Elevation by T Rajendran Sir About Thalapathy Vijay 🔥🔥🔥@TVKVijayHQ pic.twitter.com/345c9xUye5
— TVK VIJAY THIYAGU (@vijay_tambaram) September 12, 2025
“>
