சமூக வலைதளங்களில் ஒரு மூதாட்டி AI  சாட்பாட்டை தனது ஸ்டைலில் கலாய்த்து, சிரிப்பை ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. ‘AI Voice Vs Dadi Ji’ என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் (@rockstardadi_ji) பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1.78 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று சக்கைப்போடு போட்டுள்ளது.

இந்த காணொளியில், ஒரு பாட்டி ChatGPT-யுடன் தனது தனித்துவமான பேச்சு வழக்கில் உரையாடி, அதன் பதில்களை கேலி செய்து, பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். இந்த வீடியோவை பார்த்தால், நீங்களும் சிரிப்பை அடக்க முடியாமல் திணறுவீர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Dadi ji (@rockstardadi_ji)

“>

வீடியோவில், பாட்டி ChatGPT-யிடம், “நீ எங்க வாழுற?” என்று கேட்கிறார். AI, “நான் ஆன்லைனில் இருக்கிறேன், எங்கும் இல்லை” என்று பதிலளிக்க, பாட்டி விடாமல், “எனக்கு AI வீட்டு அட்ரஸ் சொல்லு, நேரில் போய் பார்க்கணும்!” என பிடிவாதம் பிடிக்கிறார்.

பின்னர், மொபைல் ஃபோன் குறித்து உதவி கேட்கும்போது, AI “முழு முயற்சி செய்கிறேன்” எனக் கூற, பாட்டி உடனே, “உன் உதவியை வச்சுக்கோ, ஆச்சி-தாச்சி!” என டயலாக் விட, இணையவாசிகள் சிரிப்பில் மூழ்கிவிட்டனர்.

ஒரு பயனர், “நீ சாலையில் திரியுறியா பையா!” என கமெண்ட் செய்ய, மற்றொருவர், “பாட்டி ChatGPT-யை கதற விட்டுட்டாங்க!” என்றார். இன்னொருவர், “இந்தியா ஆரம்பகட்ட வீரர்களுக்கு இல்லை!” என வேடிக்கையாக குறிப்பிட்டார். இந்த வைரல் வீடியோ, பாட்டியின் துள்ளலான பேச்சால் இணையத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.