தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி ஒருவர் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாத்ரூம் செல்ல வேண்டும் என வீட்டிற்குள் நுழைந்த மேல்புறம் ஒன்றிய தவெக இணைச் செயலாளர் அர்ஷிதா விட்டிற்குள் நுழைந்து 11 சவரன் தங்க நகைகளை திருடியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் கொடுத்த புகாரின் படி போலீசார் அர்ஷிதாவை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது