அதிமுகவில் உள்கட்சி பிரச்சனைகள் முற்றிக்கொண்டிருக்கும் நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவில் இருந்து அதிருப்தியில் உள்ள பல தலைவர்களையும் தங்களது தரப்புக்கு இழுத்து வருவதில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் முக்கிய பங்காற்றி வருகிறார் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் திமுகவின் பாய்ச்சலை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி வரும் முக்கிய தொண்டர்களை திமுகவிற்கு அழைத்து வருவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், கரூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பலர் தங்களைத் திமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வில் முக்கிய மாவட்ட மற்றும் பகுதி நிலைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“>

 

மேலும், கொங்குமண்டலத்தில் முக்கியமான ஒரு முன்னாள் அமைச்சரை திமுகவிற்கு இழுத்துவரும் திட்டத்தில் செந்தில்பாலாஜி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்தடுத்து அதிமுகவை விட்டு திமுகவில் இணையும் ஓட்டம் அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

“>