சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அதன்படி, இன்று (செப்.7) இரவு 11 மணியளவில் முழு சந்திரனும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கவுள்ளது. இதனை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வகையில், வானியல் ஆர்வலர்கள் மற்றும் வானியல் குழுமம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம், கோவூர், நாவலூர் உள்ளிட்ட 10 இடங்களில் பொதுமக்கள் கிரகணத்தின் அழகிய காட்சியை ரசிக்கலாம். தொலைநோக்கிகள் மற்றும் வானியல் விளக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், விண்வெளி ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது ஒரு அரிய அனுபவமாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
