இந்த உலகத்தில் புத்திசாலிதனமாக   செய்பவர்களுக்கு பஞ்சமில்லை என்பதற்கான இன்னொரு  எடுத்துக்காட்டு, தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ  பரவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் எதாவது புதியதும், வித்தியாசமானதும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோவில், ஒரு பெண்மணி  மரத்தில் தொங்கவிடப்பட்ட டயரால் சலவையந்திரத்தை உருவாக்கி துணிகளை துவைப்பது போல் காணப்படுகிறது.

அந்த பெண் , பழைய டயரை மரத்தில் கட்டி, அதன் அடிப்பகுதியை மூடி, அதில் தண்ணீர் ஊற்றி, பின்னர் துணிகளை சேர்த்து, சலவைப் பொடியில் கலந்து மெல்ல சுழற்றி சலவை செய்கிறார். பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், இந்த இயந்திரமற்ற சலவை யுக்தி, பாரம்பரிய அறிவையும், சாமானியர்களின் புத்திசாலித்தனத்தையும் நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

“>


இந்த வீடியோவை பார்த்து சூப்பர் அக்கா!” எனக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவைப் பார்த்ததும், “தனக்கு  வேண்டுமானால் எதையும் செய்து காட்டலாம்” என்பதே மனதில் தோன்றுகிறது. நவீன சலவை இயந்திரங்கள் இல்லாமலேயே, இவ்வாறு ஒரு நடைமுறை யுக்தியால் பணியைச் சுலபமாக்கும் இந்த பெண்மணி , உண்மையில் ஒரு புத்திசாலிதான் .