அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறக்க இருக்கிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து இன்று பேச இருக்கிறார். அவர் என்ன பேசப்போகிறார் கட்சியிலிருந்து விலகுகிறாரோ அல்லது வேறு ஏதேனும் புதிய திட்டம் வைத்திருக்கிறாரா என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேனியில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் திடீரென அரசு செய்யப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் ஒரு புறம் செங்கோட்டையன் பேட்டி கொடுக்க இருக்க தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய ஆலோசனை கூட்டம் ரத்து  செய்யப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.