தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதியின் எம்எல்ஏவும் ஆன ஜவாஹிருல்லா நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி உட்பட மற்றவர்கள் பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது அதனை அதிமுக ஆதரித்துவிட்டு இப்போது சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று கூறினால் கண்டிப்பாக அதனை யாரும் நம்ப மாட்டார்கள். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கண்டிப்பாக சட்டமன்ற தேர்தலில் பெருமளவு வெற்றி பெறாது. சட்டசபை தேர்தலில் மனிதநேய கட்சி திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்றார். மேலும் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று கூறிய நிலையில் தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.