இந்தியாவில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு வந்த கொரியாவைச் சேர்ந்த ஜோங்ஸூ லீ என்ற நபர், ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜாலிமா’ பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இந்த அற்புதமான நிகழ்ச்சியை அவரது இந்திய மனைவி நேஹா அரோரா வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி, 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று, மக்களின் இதயங்களை வென்றுள்ளது. விருந்தினர்கள் ஜோங்ஸூவின் பாடலுக்கு உற்சாகமாக ஆரவாரம் செய்து, அவருடன் இணைந்து பாடிய காட்சி உண்மையிலேயே உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Neha Arora (@mylovefromkorea17)

ஜோங்ஸூ லீயின் இந்த இனிமையான பாடல் நிகழ்ச்சி இந்திய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியர்கள் அவரை ‘ஜிஜு’ என்று அன்புடன் அழைத்து, அவரது பாடல் திறமையை புகழ்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள், “ஜோங்ஸூவின் குரல் கேட்டு அசல் பாடலையே மறந்துவிட்டேன்,” என்றும், “ஜிஜு ஒரே மெட்டில் மனதை கட்டிப்போட்டுவிட்டார்,” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பயனர், “ஜிஜு தெறிக்கவிட்டார், நாங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டோம்,” எனவும், இன்னொருவர், “இது இணையத்தில் மிகவும் அழகான தருணம்,” எனவும் புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து, உண்மையான திறமையும் அன்பும் எவ்வாறு மக்களை ஒருங்கிணைக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.