விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா? நானா? நிகழ்ச்சியில் கடந்த வாரம் தெருநாய்கள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில், தெருநாய்களுக்கு ஆதரவாக பேசுவோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் காட்டப்பட்ட காட்சிகள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் தெருநாய்களை பராமரித்து வரும் பலரிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த எபிசோடை ஒளிபரப்பிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஸ்ருதி வினோத்ராஜ், விஜய் டிவி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இந்த நிகழ்ச்சியால் தெருநாய்களை பாதுகாத்து பராமரித்து வரும் நபர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் அரசியல், சமூக வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.