நடிகர் அஜித், வரும் நாட்களில் ஜெர்மனியில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் (Race) கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் அங்கு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தை நேரில் சந்திக்க வந்த ரசிகர்களிடம் பேசும் போது, “என்னை பிரபலப்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக இந்தியாவில் கார் பந்தயத்தை பிரபலப்படுத்துங்கள். கார் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், “இந்திய கார் பந்தய வீரர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். அவர்களின் உழைப்பும் திறமையும் பலருக்கு தெரியவில்லை. ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா–1 சாம்பியனாக மாறுவார்கள்” என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அஜித்தின் இந்த வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கருதப்படுகிறது.
