உத்தர பிரதேசம் காசியாபாத் நகரை சேர்ந்த அனீஸ் என்பவர், தனது மனைவி இஷ்ரத்தின் செயலால் அதிர்ச்சியில் உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிகம் செயல்பட்டு வந்த இஷ்ரத், அடிக்கடி ஆபாச வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக அனீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, மனைவி தன்னை அச்சுறுத்தி நடந்து கொண்டதோடு, பொய்யான வழக்குகளில் சிக்கவைத்து விடுவேன் என்றும், ஒருமுறை கத்தியால் தாக்கியதாகவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் மனைவிக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், பெரும்பாலான நேரம் மொபைல் போன் மற்றும் சமூக வலைதளத்தில் செலவிட்டு, குடும்பப் பொறுப்புகளை புறந்தள்ளி வருவதாகவும் அனீஸ் வேதனையுடன் கூறியுள்ளார்.

அவரது குற்றச்சாட்டுக்கான வீடியோ சான்றுகளையும் போலீசிடம் சமர்ப்பித்துள்ளார். “தற்கொலை செய்து கொள்வேன், உன்னையும் உன் குடும்பத்தினரையும் பொய்யான வழக்குகளில் சிக்கவைத்து விடுவேன்” என அடிக்கடி மிரட்டியதாக அனீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் லோனி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக காசியாபாத் உதவி கமிஷனர் சித்தார்த் கவுதம் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.