பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் மற்றும் திரைப்பட இயக்குநராக பணியாற்றிய எஸ்.என். சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர் இயக்கிய ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு எம்.எஸ். பாஸ்கர், தீபக், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரை இணைத்து ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற ஹாஸ்ய திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். தனது கடைசி திட்டமாக, Do Tamil சேனலில் வெளியான ‘பட்ஜெட் குடும்பம்’ என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார்.
இவர் காலமான செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரைப்படத்துறையும், தொலைக்காட்சி துறையும் சேர்ந்த பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
சக்திவேல் அவர்களின் நகைச்சுவைமிக்க கதைகளும், குடும்ப பாசத்துடன் கூடிய கதையம்சங்களும் பார்வையாளர்களிடம் இடம்பிடித்தன. அவரது அகால மறைவு, தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி துறைக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
