பாஜக,  அதிமுக கூட்டணியில் புதிதாக இரண்டு கட்சிகள் இணைந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மற்றும் இந்திய நீதிக் கட்சி (IJK) தலைவர் ரவி பச்சமுத்து நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின்போது பாஜகவின் மாநில  தலைவர் நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது 2026ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தொகுதிப் பங்கீடு, கூட்டணி வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜக தனது கூட்டணியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெருங்கிய அரசியல் அணிகளை தன்னோடு இணைக்க முயற்சி எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே இந்த இரு கட்சிகளும் தற்போது கூட்டணியில் இணைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.