தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தாலும், இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் அழுத்தம் கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் செயல்பட தகுதியுடையவை; இதை போலீசார் தடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தலை டிஜிபி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
