சிறுத்தை தாக்குதலில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நாயின் வீரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, அதாவது சிறுத்தை ஒன்று குழந்தையை தாக்க முயன்றபோது, துணிச்சலான நாய் ஒன்று குறுக்கிட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய திகிலூட்டும் தருணத்தை வெளிப்படுத்துகிறது.
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, பின்னால் இருந்து பதுங்கி வந்த சிறுத்தை தாக்குவதற்கு தயாரான நிலையில், அங்கிருந்த நாய் ஒன்று உரத்த குரைப்பால் எச்சரிக்கை செய்து, சிறுத்தையை விரட்டியடித்தது. இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, இது இணையத்தில் பரவி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
குழந்தை அறியாமல் முற்றத்தில் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுத்தை அமைதியாக பின்னால் வந்து தாக்குதலுக்கு தயாரானது. ஆனால், நாயின் கூர்மையான எச்சரிக்கை குரைப்பால் புலி பயந்து உடனடியாக பின்வாங்கியது. சிறுத்தை தப்பி ஓடுவதை பார்த்த பிறகு, தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்தேன் என்பதை உணர்ந்த குழந்தை, பயத்தில் அழுதபடி வீட்டுக்குள் ஓடியது.
இன்ஸ்டாகிராமில் சிலர், சிறுத்தை அநேகமாக முற்றத்தில் இருந்த நாய்க்குட்டியை தாக்க வந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும், பெரும்பாலோர் நாயின் விழிப்புணர்வை பாராட்டினர். “நாய் தம்பி உயிரை காப்பாற்றிட்டான்” என்று பலர் புகழ்ந்தனர். இந்த வீடியோ, வனவிலங்குகள் உலாவும் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது.
