சமூக வலைதளங்களில் தினமும் புதுமையான, ஆச்சரியமான பல்வேறு வீடியோக்கள் பகிரப்படுகிறது. சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைத்தாலும், சிலவை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கடல் உணவுகளில் மிகுந்த ஆர்வமுள்ள ஒரு பெண், லைவ் பிராண்ஸ் சாப்பிட ஆசைப்பட்டார்.
Girl tries to cook a mantis shrimp and finds out pic.twitter.com/eLzdHj2KwP
— non aesthetic things (@PicturesFoIder) August 13, 2024
ஆனால் அந்த ஆசை அவருக்கு கொஞ்சம் பெரிய சோதனையாக மாறியது. ரெஸ்டாரண்டில் அமர்ந்த அந்த பெண், பிராண்ஸை எடுத்த போது அது திடீரென அசைந்து, அவரை கடித்தது. அதனால் வலியால் அவர் கூச்சலிட்டார்.
இந்த வீடியோ ‘Rural Life China’ என்ற டிக் டாக் கணக்கில் பதிவானது. பின்னர் X பிளாட்ஃபார்மில் @PicturesFoIder என்ற கணக்கில் பகிரப்பட்டது. ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் இதை பார்த்து பரபரப்புடன் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவரின் கருத்து – “இனி இந்த பெண் லாப்ஸ்டர் சாப்பிட மாட்டார் போல இருக்கு” என பதிவிட்டுள்ளார்.
