ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்தியா மீது குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதமாக 25 சதவீத வரி விதித்திருந்தார்.
இந்நிலையில், அதே நிலைப்பாட்டில் வலியுறுத்திய டிரம்ப், மேலும் 25% கூடுதல் வரியை விதிக்க அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால், இந்தியப் பொருட்கள் மீது மொத்தமாக 50% வரி விதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த அறிவிப்பு, அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலம் வெளியாகியுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு, நாளை (ஆகஸ்ட் 27) அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம், இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளான ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகம் இருப்பதாகவும், இது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
